/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிரதமர் மோடிக்கு எதிரானவர்கள் கைது: மா.கம்யூ., சீத்தாராம் யெச்சூரி பேச்சு
/
பிரதமர் மோடிக்கு எதிரானவர்கள் கைது: மா.கம்யூ., சீத்தாராம் யெச்சூரி பேச்சு
பிரதமர் மோடிக்கு எதிரானவர்கள் கைது: மா.கம்யூ., சீத்தாராம் யெச்சூரி பேச்சு
பிரதமர் மோடிக்கு எதிரானவர்கள் கைது: மா.கம்யூ., சீத்தாராம் யெச்சூரி பேச்சு
ADDED : ஏப் 13, 2024 02:38 AM
திண்டுக்கல் : ''அமலாக்கத்துறை அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு எதிரானவர்களை மட்டும் கைது செய்கிறார்கள்,'' என,மா.கம்யூ.,அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
திண்டுக்கல் மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
2019 தேர்தலை போல் இந்த தேர்தலிலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த முறையும் பா.ஜ.,வுக்கு அடி கொடுக்க வேண்டும். ஆபத்தில் உள்ள நம் நாட்டை மீட்டெடுக்க வேண்டும். திண்டுக்கல் பல விஷயங்களுக்கு பெயர் பெற்று உள்ளது. இங்கே சிறுகுறு வியாபாரிகள் அதிக அளவில் உள்ளார்கள். முக்கியமாக ஏராளமான உழைப்பாளிகள் உள்ளார்கள்.
இந்திய தேசம் பாதுகாக்கப்பட வேண்டும். 10 ஆண்டுகளாக நாம் பாதுகாத்த மரியாதையை பா.ஜ.,அரசு காலில் போட்டு மிதித்துள்ளது. நீதிபதிகள் நியமனத்திலும் பா.ஜ., அரசு காலதாமதம் படுத்தி உள்ளது. பிரதமர் மோடி நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
அதிக ஊழல்வாதிகளை நான் கட்டுப்படுத்தி உள்ளேன் என கூறுகிறார். அதை ஆராய்ந்து பார்த்தால் அனைவருமே பா.ஜ.,வை எதிர்ப்பவர்களாக தான் இருப்பார்கள். பா.ஜ.,வில் சேர்ந்தால் ஊழல் வழக்குகள் கிடப்பில் போடப்படும். அமலாக்கத்துறை பிரதமர் மோடிக்கு எதிரானவர்களை மட்டும் கைது செய்கிறார்கள். மோடி அரசு ஹிந்தியை மக்கள் மீது திணிக்கிறார்கள். பா.ஜ.,ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிக்கின்றார்கள் என்றார்.
அமைச்சர் ஐ. பெரியசாமி, எம்.எல்.ஏ.,செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி ,மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ம.தி.மு.க.,மாவட்ட செயலாளர் செல்வராகவன், வி.சி.க.,மைதீன் பாவா பங்கேற்றனர்.

