/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
/
பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
ADDED : மார் 06, 2025 03:38 AM
வேடசந்துார்: உசிலம்பட்டி ஊராட்சி நவாமரத்துப்பட்டியில் அமைதி அறக்கட்டளை, சமூக நலத்துறை, மாவட்ட காவல்துறை சார்பில், குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்கள் உரிமைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். திண்டுக்கல் குழந்தைகள் பாதுகாப்பு சமூகப் பணியாளர் ஜெபா ரோசமான், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து முன்னிலை வகித்தனர்.
புதுடெல்லி குழந்தைகள் உரிமை போராளி ராஜீவ், குழந்தைகள் சட்ட பாதுகாப்பு இயக்கம் ஜூஸ்டு குழந்தைகள் ,பெண்களுக்கான மொபைல் எண்கள் எழுதிய விழிப்புணர்வு தகவல் பலகையை திறந்து வைத்து பேசினர். அமைதி அறக்கட்டளை மேலாளர் சீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா பேசினர்.