ADDED : ஆக 15, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி செஞ்சுருள் இயக்கம் சார்பாக இளைஞர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட எய்ட்ஸ் சங்கம் மூலமாக விழிப்புணர்வு கூட்டம், வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.
தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி வரவேற்றார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மேற்பார்வையாளர் ஜெசிந்தா பேசினார். எச்.ஐ.வி. எய்ட்ஸ் பால்வினை நோய் குறித்த தீவிர விழிப்புணர்வு பிரசாரம் ஆக.12 முதல் அக்.16 வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.