/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அனுமதியின்றி பேனர்: 21 பேருக்கு நோட்டீஸ்
/
அனுமதியின்றி பேனர்: 21 பேருக்கு நோட்டீஸ்
ADDED : மே 16, 2024 05:34 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றக்கோரி 21 பேருக்கு மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி உள்ளது.
திண்டுக்கல் நகரில் கோயில் விழாக்கள்,திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் வாழ்த்து பேனர்கள் வைக்கப்படுகிறது. இதற்கு மாநகராட்சியில் முறையாக அனுமதி வாங்க வேண்டும்.
சிலர் அனுமதி பெறாமல் வைக்கின்றனர். மும்பையில் ராட்சத பேனர் சரிந்து 14 பேர் பலியானதன் எதிரொலியாக திண்டுக்கல் மாநகராட்சி நகரமைப்பு துறை சார்பில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர் விபரங்களை சேகரித்தனர். 21 பேர் அனுமதியின்றி வைத்திருப்பது தெரிந்தநிலையில் முதல் கட்டமாக 8 பேருக்கு பேனர்களை அகற்றக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களுக்கு இன்று வழங்கப்படுகிறது. பேனர்களை அகற்றாவிட்டால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.