ADDED : ஆக 24, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் பொதுக்குழு கூட்டம்,37 வது ஆண்டு விழா நடந்தது.
மாவட்ட தலைவர் பொன்னையா தலைமை வகித்தார். ஓய்வு அலுவலர்கள் சங்க மாநில பொது செயலாளர் முத்துகுமரவேலு,மதுரை மண்டல மாநில துணைத் தலைவர் தாமோதரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கருவூல அலுவலர் விஜய நிர்மலா, ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மாணிக்கம்,வாசன் கண் மருத்துவமனை தமிழ்நாடு தலைமை மருத்துவ இயக்குநர் கமல்பாபு பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.9000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

