/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'மே' யில் நடத்தலாமே: ஆசிரியர் கலந்தாய்வு இட மாறுதல் எப்போது: பழைய முறைப்படியே நடத்த ஒருமித்த குரல்

ADDED : மே 03, 2024 06:30 AM

ஒவ்வொரு கல்வியாண்டின் முடிவில் மே மாதத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இட மாறுதல் நடைபெறும்.
அதில் ஒன்றியத்திற்கு உள் இட மாறுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடம் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல் என எளிய முறையில் 60 ஆண்டு காலமாக இதே நடைமுறை இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறையை மாற்றி அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் பழைய நடைமுறைபடியே ஒன்றிய வாரியாக, மாவட்ட வாரியாக, மாநில வாரியாக கலந்தாய்வுகளை நடத்த கோரி டிட்டோஜாக் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இது போல் ஜாக்டோ ஜியோ அமைப்பும் போராட்டம் நடத்தினர்.இதற்குள் லோக்சபா தேர்தல் வந்ததால் போராட்டங்கள் நிறுத்தப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் தேர்தல் முடிந்தவுடன் நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.தற்போது லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் ஆசிரியர்களின் கலந்தாய்வு மாதமான மே துவங்கி உள்ளது. ஜூன் 6 ல் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் குறித்த கலந்தாய்வு முறையை பழைய முறைப்படியே நடத்த வேண்டும் என்ற கோரிக்கை திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.