/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாக்குறுதியாவது கிடைக்குமா? நரசிங்கபுரம் மக்களின் ஏக்கம்
/
வாக்குறுதியாவது கிடைக்குமா? நரசிங்கபுரம் மக்களின் ஏக்கம்
வாக்குறுதியாவது கிடைக்குமா? நரசிங்கபுரம் மக்களின் ஏக்கம்
வாக்குறுதியாவது கிடைக்குமா? நரசிங்கபுரம் மக்களின் ஏக்கம்
ADDED : ஏப் 13, 2024 02:39 AM
வடமதுரை : வடமதுரை பேரூராட்சி நரசிங்கபுரத்திற்கு நிரந்தர 'வழி' ஏற்படுத்த அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி தருவார்களா என்ற ஏக்கம் கிராமத்தினரிடம் உள்ளது.
வடமதுரையில் இருந்து நாடுகண்டனுார், அத்திக்குளத்துபட்டி வழியே கன்னிமார்பாளையம் செல்லும் ரோட்டில் ரயில்வே லெவல் கிராசிங் கேட் உள்ளது. இப்பகுதியில் இருந்து ரயில்பாதையோரத்தை நரசிங்கபுரம் மக்கள் பாதையாக பயன்படுத்தினர். ஆனால் இரட்டை ரயில் பாதை திட்டத்தில் இந்த பாதை அடைப்பட்டது. இதனால் கிராமத்திற்கென நிரந்தர ரோடு வசதியில்லாமல் உள்ளது. இங்கு அரசு சார்பில் குடிநீர், தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாரபூர்வமான வழி மட்டும் கிடைக்காமல் உள்ளது.
தற்போது லோக்சபா தேர்தலுக்காக ஓட்டு சேகரிப்பு பிரசாரம் மும்முரமான நிலையில் நரசிங்கபுரம் கிராமத்திற்கு நிரந்தர வழி கிடைக்க அரசியல் கட்சிகள் வாக்குறுதி தந்து, பின்னர் அதை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிராமத்தினரிடம் உள்ளது.

