/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் விலை குறைந்த காய்கறிகள்
/
ஒட்டன்சத்திரத்தில் விலை குறைந்த காய்கறிகள்
ADDED : ஏப் 11, 2024 05:39 AM

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கொள்முதல் செய்ய கேரள வியாபாரிகள் வராததால் காய்கறிகள் விலை குறைந்து காணப்பட்டது.
கேரளாவில் நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இதனால் நேற்றும், நேற்று முன்தினமும் கேரளா வியாபாரிகள் கொள்முதல் செய்ய வரவில்லை.
இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் விலை குறைந்து காணப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு குண்டு ரக பச்சை மிளகாய் கிலோ ரூ.120 வரை விற்பனையானது. நேற்று முன்தினம் இதன் விலை கிலோவிற்கு ரூ.45 குறைந்து ரூ.75 க்கு விற்பனையானது.
கிலோ ரூ.25 க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.18 க்கு விற்றது.
கமிஷன் கடை உரிமையாளர்கள் கூறுகையில்,'கேரளா வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு இன்னும் ஓரிரு நாட்களாகும்' என்றனர்

