/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் அல்லாடும் சின்னக்குளம்
/
ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் அல்லாடும் சின்னக்குளம்
ADDED : ஆக 25, 2024 05:04 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி சின்னக்குளம் முழுவதையும் மூடியுள்ள ஆகாயத்தாமரரையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர் .
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான சின்னக்குளம் காந்தி காய்கறி மார்க்கெட் பகுதியில் தொடங்கி தாராபுரம் ரோடு வரை உள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இங்கு கலக்கிறது.
இக்குளத்தின் ஒரே நீர் ஆதாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெய்யும் மழை நீர் . இப்பகுதியில் கனமழை பெய்யும் போது குளம் நிரம்பும்.
தற்போது நீர் மட்டம் எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரியாத வகையில் குளம் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.
குளத்தை துார்வாரி ஆகாயத்தாமரைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .