/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்னாளபட்டியில் பேரூராட்சி இடத்தை வீணடித்து பூங்கா; பா.ஜ., புகார்
/
சின்னாளபட்டியில் பேரூராட்சி இடத்தை வீணடித்து பூங்கா; பா.ஜ., புகார்
சின்னாளபட்டியில் பேரூராட்சி இடத்தை வீணடித்து பூங்கா; பா.ஜ., புகார்
சின்னாளபட்டியில் பேரூராட்சி இடத்தை வீணடித்து பூங்கா; பா.ஜ., புகார்
ADDED : ஆக 30, 2024 05:49 AM
சின்னாளபட்டி : சின்னாளபட்டி பேரூராட்சி பூங்கா கட்டுமானத்தில் இடம் வீணடிக்கப்படுவதாக பேரூராட்சி அலுவலகத்தில் பா.ஜ.,வினர் புகார் செய்துள்ளனர்.
பேரூராட்சியில் மனைப்பிரிவு அனுமதியின்போது பேரூராட்சி வளர்ச்சிப் பணிக்கான குறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்கப்படும். சின்னாளபட்டியில் 10க்கு மேற்பட்ட இடங்களில் பூங்காவிற்கென ஒதுக்கப்பட்டு உள்ளது.
சில இடங்களில் பூங்கா அமைத்தும் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படவில்லை.
பெரும்பாலானவை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. 17வது வார்டு கருணாநிதி காலனியில் பூங்காவிற்கான இடத்தில் சில மாதங்களுக்கு முன் தி.மு.க., சார்பில் தகர கொட்டகை மூலம் கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டது. கட்சிக் கொடியேற்றி திறப்பு விழா நடத்திய நிலையில் ஆக்கிரமிப்பு சர்ச்சையால் கலெக்டர் உத்தரவால் அகற்றப்பட்டது.
தற்போது இதே பகுதியில் ரூ.27 லட்சம் மதிப்பிலான பூங்கா சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் நடக்கிறது.
இதில் பூங்காவிற்கு சொந்தமான இடத்தை வீணடித்து ஒதுக்கிவிட்டு கட்டுமான பணிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. பா.ஜ., மண்டல் தலைவர் விக்கேஷ் தலைமையில் கட்சியினர் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசியிடம் புகார் மனு அளித்தனர். அதில் , '17வது வார்டில் பூங்கா கட்டுமானத்தில் தனியார் ஆக்கிரமிக்க ஏதுவாக இடம் ஒதுக்கி கட்டட பணிகள் துவக்கி உள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். விக்கேஷ் கூறுகையில், 'அரசு இடத்தை மீட்க வலியுறுத்தி பேரூராட்சி, வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்,' என்றார்.

