ADDED : ஏப் 19, 2024 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே நல்லுார்பட்டியில் தென்னந்தோப்பு தீப்பிடித்து எரிந்ததில் நுாற்றுக்கு மேற்பட்ட மரங்கள் எரிந்தது.
அம்பிளிக்கை ஊராட்சி நல்லுார்பட்டியைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி 54. ஆறு ஏக்கரில் தென்னந்தோப்பு வைத்துள்ளார். தென்னந்தோப்பு செல்லும் பாதையில் புகை பிடித்த நபர்கள் தீயை அணைக்காமல் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதிலிருந்த தோன்றிய நெருப்பு தென்னந்தோப்பில் இருந்த தென்னை மட்டையில் பிடித்ததால் தென்னந்தோப்பு முழுவதும் தீ பரவியது.
நுாற்றுக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் எரிந்தது. ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

