/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அனுமதி இடங்களில் விநாயகர் சிலைகளை கரையுங்க; கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தல்
/
அனுமதி இடங்களில் விநாயகர் சிலைகளை கரையுங்க; கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தல்
அனுமதி இடங்களில் விநாயகர் சிலைகளை கரையுங்க; கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தல்
அனுமதி இடங்களில் விநாயகர் சிலைகளை கரையுங்க; கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தல்
ADDED : செப் 01, 2024 03:46 AM
திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்தியின்போது ரசாயணக் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்தி, தேர்வு செய்யப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தி உள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். எஸ்.பி., பிரதீப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தாசில்தார்கள் , அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விநாயகர் சதுர்த்தியின் போது ரசாயணவர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால்நீர்நிலைகள் மாசுபடுகின்றன. ரசாயணக் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். மாவட்டத்தில் திண்டுக்கல் கோட்டைக்குளம், நிலக்கோட்டை வைகை ஆறு, கண்ணாப்பட்டி ஆறு, வத்தலக்குண்டு, அம்மையநாயக்கனுார், ஒட்டன்சத்திரம் தலைக்குத்து அருவி, பழநி சண்முகாநதி, வேடசந்துார் அழாகபுரி ஆறு, நத்தம் அம்மன்குளம், கொடைக்கானல் டோபிகானல் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட பாதையில் தான் சிலை ஊர்வலம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.