/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விடுப்பு இல்லையெனில் புகார்; தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
/
விடுப்பு இல்லையெனில் புகார்; தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
விடுப்பு இல்லையெனில் புகார்; தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
விடுப்பு இல்லையெனில் புகார்; தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
ADDED : ஏப் 05, 2024 12:11 AM

திண்டுக்கல் : தேர்தல் நாளானா ஏப்.19 ல் ஏதேனும் நிறுவனம் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க மறுத்தால் புகார் அளிக்கலாம் என திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் மலர்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது : லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப். 19 ல் நடக்கிறது. அன்றைய தினம் அனைவரும் ஓட்டளிக்க ஏதுவாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் , வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து, பீடி,சுருட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்கள் ஓட்டளிக்கும் பொருட்டு ஊதியத்துடம் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்,
இது தொடர்பாக தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டறை, தொழிலாளர் உதவி ஆணையர் 97897 23235, துணை ஆய்வாளர் 99523 05662, உதவி ஆய்வாளர் 98944 11542 ல் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

