ADDED : மே 20, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலில் சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும் வைகாசி மாதத்தில் முதல் 7 நாட்களிலும் அக்னி நட்சத்திர விழா எனும் சித்திரை கழுவு பூஜை நடக்கும். இந்த ஆண்டு மே7 முதல் மே20 வரை இவ்விழா கடைபிடிக்கப்படுகிறது.
இவ்விழாவில் உள்ளூர் பக்தர்கள் சேலம், திண்டுக்கல், கரூர், நாமக்கல், கோவை, உள்ளிட்ட வெளியூர் பக்தர்கள் கடம்ப மலர் சூடி கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம்.
இந்த நாட்களில் முருகன்கோயில் கிரிவலம் வரும்போது மூலிகை காற்று வீசுவதால் நோய்கள் குணமாகும் என்பது ஐதிகம்.
கிரிவல பாதையில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் பக்தர்கள் சென்று வழிபடுவர்.
இன்று அக்னி நட்சத்திர பூஜை பூர்த்தியை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு முருகன்கோயில் விஸ்வரூபம் தரிசனம் 4:30 மணிக்கு விழா பூஜை நடக்கிறது.

