தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காங்., மன்னிப்பு கேட்க வேண்டும் கதலி நரசிங்கபெருமாள் பேட்டி

காங்., மன்னிப்பு கேட்க வேண்டும் கதலி நரசிங்கபெருமாள் பேட்டி

காங்., மன்னிப்பு கேட்க வேண்டும் கதலி நரசிங்கபெருமாள் பேட்டி


ADDED : மே 10, 2024 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2024 11:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:''மக்களிடம் காங்., மன்னிப்பு கேட்க வேண்டும்'' என பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: காங்., கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா, இந்தியர்களை பிளவுபடுத்தும் வகையில் நிறங்கள் குறித்த கருத்தை கூறியிருக்கிறார். காங்., கட்சியின் முக்கிய ஆலோசகராக அவர் இருக்கிறார்.

தற்போது ராஜினாமா செய்துவிட்டார் என்று கூறுகின்றனர். எனவே அதை அவருடைய தனிப்பட்ட கருத்து என்று காங்., ஒதுக்கிவிட முடியாது. இந்தியர்களின் ஒற்றுமையை பிளவுபடுத்தும் முயற்சியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே காங்., கட்சியும் ராகுலும் இந்திய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us