/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ஜ.,நிர்வாகியை தாக்க வந்த காங்., பெண்கள்
/
பா.ஜ.,நிர்வாகியை தாக்க வந்த காங்., பெண்கள்
ADDED : ஜூலை 04, 2024 02:23 AM

திண்டுக்கல்: காங்.,தலைவர் ராகுல் படம் மீது செருப்பு வைத்து முகநுாலில் இழிவாக பதிவு செய்த திண்டுக்கல் பா.ஜ.,நிர்வாகியை துடைப்பத்தால் தாக்க காங்.,கட்சியை சேர்ந்த பெண்கள் வந்தநிலையில் மாவட்ட தலைவர் சமாதானம் செய்து பிரச்னையை முடித்தார்.
திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் ரிஷி. இவர் பா.ஜ.,வில் ஆன்மிக மாநகர தலைவராக உள்ளார். காங்.,தலைவர் ராகுல் படத்துடன் செருப்பு வைத்தும்,காங்.,நிர்வாகிகள் குறித்து இழிவான வார்த்தைகளை முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த திண்டுக்கல் மாநகர காங்.,தெற்கு பகுதி செயலாளர் நாகலட்சுமி தலைமையில் காங்.,பெண் நிர்வாகிகள் துடப்பத்துடன் வந்து பா.ஜ.,நிர்வாகி ரிஷியை தாக்க முயன்றனர். காங்.,மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் நிர்வாகிகளை சமாதானம் செய்து பிரச்னையை சரி செய்தார். காங்.,நிர்வாகிகள் பா.ஜ.,நிர்வாகியை கைது செய்ய கோரி போலீசில் புகார் செய்தனர்.