ADDED : ஜூலை 18, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம், ஜூலை 19-
ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லுாரியில் தொலைத்தொடர்பு சேவைகள் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி குடிமக்கள் நுகர்வோர், குடிமை நடவடிக்கை குழு சார்பாக நடந்தது. கல்லுாரி முதல்வர் பரிமளகீதா வரவேற்றார். மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் தலைவர் சுரேஷ்குமார், குடிமக்கள் நுகர்வோர், குடிமை நடவடிக்கை குழு ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன், பி.எஸ்.என்.எல்., உதவி கோட்ட மேலாளர் சண்முக சீனிவாசன், தனியார் நிறுவன மேலாளர்கள் ஆனந்த், கார்த்திக் விழிப்புணர்வு கருத்துக்களை கூறினர். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் ரூபஸ் ஆல்பர்ட் பிச்சை நன்றி கூறினார்.
