/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தற்செயல் விடுப்பு போராட்டம்; ஊராட்சி செயலாளர் சங்கம் முடிவு
/
தற்செயல் விடுப்பு போராட்டம்; ஊராட்சி செயலாளர் சங்கம் முடிவு
தற்செயல் விடுப்பு போராட்டம்; ஊராட்சி செயலாளர் சங்கம் முடிவு
தற்செயல் விடுப்பு போராட்டம்; ஊராட்சி செயலாளர் சங்கம் முடிவு
ADDED : ஆக 19, 2024 01:07 AM

நிலக்கோட்டை: தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வலியுறுத்தி ஆக.21ல் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த இருப்பதாக மாநிலஇணைச்செயலாளர் விஜயகர்ண பாண்டியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைப்பது சம்பந்தமாக தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்காமல் உள்ளது.
எனவே அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலக முன் ஆக.21ல் தற்செயல் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு கவனத்தில் கொள்ளாமல் இருந்தால் செப். 27ல் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு மாநில அளவிலான கவன ஈர்ப்பு இயக்கம் நடத்த உள்ளோம்என்றார்.