/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எல்லை மீறும் டிரோன்களால் விபரீதத்துக்கு வாய்ப்பு; அசம்பாவிதங்கள் நடக்கும் முன் தேவை நடவடிக்கை

ADDED : செப் 01, 2024 06:38 AM

தொழில்நுட்பங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் அதிக வியூஸ் , லைக் கள் பெறுவதற்காக இளைஞர்கள் அதிதொழில்நுட்ப கேமராக்கள் மூலம் காட்சிகளை படம் பிடித்து வருகின்றனர். இதில் ெஹலிகேம் எனும்டிரோன் கேமராக்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. கல்யாணம், காதுகுத்து தொடங்கி கோயில் திருவிழாக்கள் வரை இந்த டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படாத இடமே இல்லை. இயற்கை காட்சிகள், வனப்பகுதிகள், அணைகள் போன்வற்றை உயரத்தில் இருந்தபடியே காட்சிப்படுத்தும் இந்த டிரோன் கேமராக்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
ஆனால் இதற்கென அனுமதி உள்ளிட்ட எந்த வித கட்டுப்பாடுகளும் இது வரை இல்லை. கண்ட இடத்தில் கேமராக்கள் கண்ணிற்கு எட்டாத துாரத்தில் பல விஷயங்களை காட்சிப்படுத்தப்படுகிறது.
குறிப்பாக பழநி முருகன் கோயில் மலையை சுற்றிலும் அதிகளவில் டிரோன்கள் பயன்படுத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கோயில் கோபுர கலசங்களை நெருங்கும் வகையில் இந்த டிரோன்களை பறக்க விடுகின்றனர். இவர்கள் எங்கிருந்து இயக்குகின்றனர் என்பதும் எவருக்கும் தெரியவில்லை. அதே போல்தான் தான் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நடக்கிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் சூழலும் இருக்கிறது.
இனிமேல் இதுபோன்ற டிரோன் கேமராக்களை இயக்க உரிய அனுமதி பெற வேண்டுமென்ற விதியை உருவாக்க வேண்டும். இதன் மீது மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டலை உருவாக்க வேண்டும்.