/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக் இறுதி போட்டி பிரசித்தி வித்யோதயா அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக் இறுதி போட்டி பிரசித்தி வித்யோதயா அணி வெற்றி
கிரிக்கெட் லீக் இறுதி போட்டி பிரசித்தி வித்யோதயா அணி வெற்றி
கிரிக்கெட் லீக் இறுதி போட்டி பிரசித்தி வித்யோதயா அணி வெற்றி
ADDED : மே 08, 2024 05:41 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பட்ஸ் கல்வி குழுமம் நடத்திய 16 வயதுக்கு உட்பட்ட மாவட்ட அளவிலான திருமலைராஜ் நினைவு கிரிக்கெட் இறுதி போட்டியில் பிரசித்தி வித்யோதயா அணி வெற்றி பெற்று கோப்பை வென்றது.
சிறந்த பேட்ஸ்மேனாக என்.பி.ஆர். கிரிக்கெட் அகாடமி அணியின் சித்தார்த்,சிறந்த பவுலராக பிரசித்தி வித்யோதயா அணியின் ஹேமந்த் தேர்ந்தெடுக்க பட்டனர். போட்டியில் என்.பி.ஆர் அணி 2வது இடம், திருமலை ராஜ் நினைவு அணி 3வது இடம், வேடசந்துார் ஜாஹிர் அணி 4வது இடம் பிடித்தது.
ஒட்டன்சத்திரம் பழனியாண்டவர் மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் நத்தம் என்.பி.ஆர்.கிரிக்கெட் அகாடமி அணி 25 ஓவரில் 7 விக்கெட் இழந்து 240ரன்கள் எடுத்தது. சித்தார்த் 65, தீபன் 43, கோபிநாத்பாண்டி 38ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த வேடசந்துார்ஜாஹிர் கிரிக்கெட் அகாடமி அணி 16.4 ஓவரில் 77ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. கோபிநாத்பாண்டி 4, நிதீஸ்வரன் 3 விக்கெட் எடுத்தனர்.
2வது அரையிறுதி போட்டியில் ஆடிய திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி 25 ஓவரில் 102ரன்கள் எடுத்துஆல்அவுட்டானது. சரத்ராம் 29ரன்கள் எடுத்தார்.சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் டி.திருமலை சி.ஏ. அணி 25 ஓவரில் 8 விக்கெட் இழந்து 88 ரன்கள் எடுத்தது. சிவேஷ் தருண் 3 விக்கெட் எடுத்தார்.
இறுதி போட்டியில் மோதிய நத்தம் என்.பி.ஆர். கிரிக்கெட் அகாடமி ஏ அணி 25 ஓவரில் 9 விக்கெட் இழந்து139ரன்கள் எடுத்தது.
சித்தார்த் 47, சல்மான் 28ரன்கள், ஹேமந்த், .ஹரிபிரசாத் தலா 3 விக்கெட் எடுத்தனர். சேசிங்செய்த திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி 22 ஓவரில் 4 விக்கெட் இழந்து 143ரன்கள் எடுத்து வென்றது. தனிஷ் 64(நாட்அவுட்), ஹேமந்த் 29ரன்கள் எடுத்தனர்.

