/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அட்சய திருதியை நகைக் கடைகளில் கூட்டம்
/
அட்சய திருதியை நகைக் கடைகளில் கூட்டம்
ADDED : மே 11, 2024 05:35 AM
திண்டுக்கல்: அட்சய திருதியை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள நகைக்கடைகளில் பொதுமக்கள் காலை முதலே குவிந்தனர்.
அட்சய திருதியை என்றாலே நம் நினைவுக்கு வருவது தங்க நகைகளும், அதற்கான சலுகைகளும் தான். ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. அதனால் பெரும்பாலானோர் அட்சய திருதியை அன்று தங்க நகைகள்,தங்க நாணயம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறையே அட்சய திருதியை நாளாக கொண்டாடப்படுகிறது. அட்சய திருதி நாளான நேற்று திண்டுக்கல்லில் உள்ள அனைத்து நகை கடைகளிலும் தோரணங்கள்,வாழை மரங்கள் கட்டி வாடிக்கையாளர்களை நகை கடையினர் வரவேற்றனர். பெரும்பாலான நகைக்கடைகள் காலை 6:00 மணிக்கே திறக்கப்பட்டன.
வாடிக்யைாளர்களும் ஆர்வமுடன் நகை வாங்கி வாங்க குவிந்தனர். அட்சய திருதியில் நாளில் எந்த பொருள் வாங்கினாலும் பெருகும் என்று நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் தங்கம் வாங்கினால் பொன் பெருகும் என்ற நம்பிக்கையால் முடிந்த அளவிற்கு இன்றைய தினம் ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்ற நோக்கில் வந்திருக்கிறோம் என்று மக்கள் தெரிவித்தனர்.