/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து...
/
சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து...
ADDED : ஜூலை 22, 2024 05:32 AM

சேதமான மின்கம்பம்
திண்டுக்கல் - திருச்சி ரோடு நான்கு வழி சாலை ராக்கி கொட்டத்தில் மின்கம்பம் சேதமடைந்து கம்பி வெளியே தெரிகிறது. இங்கு குழந்தைகள் விளையாடும் பகுதி என்பதால் காற்றடிக்கும் நேரத்தில் முறிந்து விழும் நிலை இருப்பதால் மின்கம்பத்தை மாற்ற வேண்டும். மணிமுத்து, திண்டுக்கல்.----
ரோட்டோர மணலால் அச்சம்
திண்டுக்கல்- திருச்சி ரோடு மா.மு. கோவிலுார் பிரிவில் மணல் மேவி உள்ளதால் டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். இதனால் இவ்வழியில் செல்வோர் பயந்து போய் வேறு பாதையில் செல்கின்றனர். மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவணன், திண்டுக்கல்.----
பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி
நத்தம் தேத்தாம்பட்டியில் ரோட்டோரத்தில் உள்ள குடிநீர் தொட்டி சேதமாகி பயன்பாடற்று கிடக்கிறது. இதனால் அப்பகுதியினர் தண்ணீருக்காக பல கிலோமீட்டர் துாரம் நடந்து செல்கின்றனர். பரளிபுதுார் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வெள்ளையம்மாள் ,தேத்தாம்பட்டி.----
ரோட்டில் தேங்கும் மழைநீர்
பள்ளப்பட்டி ஊராட்சி சின்னப்பள்ளப்பட்டி ஏ.டி. காலனி தெருவில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாக்கடை ரோடு வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேஷ், சின்னபள்ளப்பட்டி.-----
குப்பையால் உருவாகும் சீர்கேடு
பழநி அருகே அ. கலையம்புத்துார் உடுமலை ரோட்டில் குப்பை கொட்டி குவிந்துள்ளது. பல நாட்களாக அல்லாமல் உள்ளதால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பையை தினமும் அகற்ற சம்பந்தபட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகன், அ. கலையம்புத்துார்.-----
தொற்று பரப்பும் கழிவுநீர்
ஒட்டன்சத்திரம் நகராட்சி தென்றல் நகரில் சாக்கடை நிரம்பி கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் இருக்கிறது. சாக்கடையை சீரமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலுமணி ஒட்டன்சத்திரம்.-----
சேரும்,சகதியுமான பஸ்ஸ்டாண்ட்
கொடைரோடு பஸ்ஸ்டாண்டில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது. இதனால் உள்ளே,வெளியே செல்லும் பஸ்களில் செல்லும் பயணிகள் தடுமாறி கீழே விழும் நிலையும் தொடர்கிறது. சகதி தேங்காமல் ரோடை சீரமைக்க வேண்டும். க.ரதிஷ்பாண்டியன் - பொம்மணம்பட்டி.-------
............................