/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
ADDED : ஏப் 10, 2024 05:32 AM

பெயர் பலகையை மறைக்கும் செடிகள்
தாண்டிக்குடி - கொடைக்கானல் ரோட்டில் புதர்மண்டி உள்ளதால் நெடுஞ்சாலைத் துறையின் பெயர் பலகை மறைந்துள்ளது. இதன் செடிகளை அகற்ற வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகம் உள்ளதால் இதை அகற்ற வேண்டும். கந்தசாமி, பண்ணைக்காடு.
................-----லாரிகளால் சேதமுற்ற ரோடுகள்
புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் இருந்து அதிக எடையுடன் டிப்பர் லாரிகள் வருவதால் ரோடு குண்டும் குழியுமாக மாறுகிறது . குடிநீர் பைப்புகள் அடிக்கடி உடைந்து குடிநீர் ரோட்டில் வீணாகிறது. கி.ரங்கசாமி, கம்பளி நாயக்கன்பட்டி.
.................--------
சிதைந்த தெரு
திண்டுக்கல் பள்ளப்பட்டி ஊராட்சி கொட்டப்பட்டி மருதமாணிக்கம் நகரில் ரோடு, சாக்கடை அமைக்க தெரு தோண்டப்பட்டு பல நாட்களாகியும், பணி செய்யாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிபடுகின்றனர். குமார் கொட்டப்பட்டி.
..........--------தாழ்வான மின்கம்பிகள்
செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி சின்னயாபுரத்தில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. வெயில் நேரம் என்பதால் அதிக பாரம் ஏற்று செல்லும் வாகனங்கள் உரசி விபத்து நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்வான மின்கம்பிகளை சரிசெய்ய வேண்டும். கண்மனி, ராஜ்நகர்.
.............---------மணல்மேவிய ரோடால் விபத்து
திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் மணல்மேவி உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நேரத்தில் தண்ணீர் ரோட்டில் ஓடுவதால் மணல் மேவி உள்ளது. டூவீலர்களில் செல்வோர் கீழே விழுகின்றனர் . சுவாதி, திண்டுக்கல்.
.........----------குப்பையால் சுகாதாரக் கேடு
திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி ரோட்டில் குப்பை குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பல்வேறு பகுதி குப்பையை கொட்டியும் அகற்றப்படாமல் உள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பையை அகற்ற வேண்டும். மயில்ராஜ், கொட்டப்பட்டி.
...............---------
ரோட்டில் ஓடும் கழிவு நீர்
திண்டுக்கல் சாலை ரோட்டில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மூடி வழியாக கழிவு நீர் ரோட்டில் செல்வதால் துர்நாற்றம் விசுகிறது .இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது . மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரிமுத்து, திண்டுக்கல்.
.............------

