/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கன்னிவாடியில் மான் வேட்டை: கைது
/
கன்னிவாடியில் மான் வேட்டை: கைது
ADDED : செப் 08, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி: கன்னிவாடி வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சித்தையன்கோட்டை பீட் பகுதியில் கன்னிவாடி ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். ஆத்துார் காமராஜர் நீர்தேக்க பகுதியில் பெண் கடமானை வேட்டையாடி இறைச்சி துண்டுகளாக வெட்டிக் கொண்டிருந்த ஆத்துாரை சேர்ந்த முருகன் 35, பிடிபட்ட நிலையில் ஏ.வெள்ளோடு ஆல்வின்எடிசன் தப்பினார். கடமானின் உடல் பாகங்கள், அரிவாள், கத்திகள் பறிமுதல் செய்தனர்.