/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோடை வெயிலால் நீர் வறட்சி நோய்: 60 வயது மேலானோருக்கு அறிவுரை
/
கோடை வெயிலால் நீர் வறட்சி நோய்: 60 வயது மேலானோருக்கு அறிவுரை
கோடை வெயிலால் நீர் வறட்சி நோய்: 60 வயது மேலானோருக்கு அறிவுரை
கோடை வெயிலால் நீர் வறட்சி நோய்: 60 வயது மேலானோருக்கு அறிவுரை
ADDED : ஏப் 11, 2024 05:56 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலால் நீர்வறட்சி நோயில் பாதிக்கப்பட்டு நோயாளிகள் உயிரிழப்பதை தடுக்க தமிழக நேஷனல் ஹெல்த் மிஷன் போதிய அறிவுரை வழங்கி உள்ளது.
கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கம் மற்ற நேரங்களை விட கூடுதலாக இருக்கும். இதனால் மனிதர்கள் மட்டுமில்லாமல் எல்லா உயிரினங்களும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. உடலில் உள்ள நீர்சத்துக்கள் குறைந்து உடல் வறட்சியான நிலைக்கு தள்ளப்படும்.
இந்த நேரங்களில் 60 வயதிற்கு மேலானவர்களுக்கு சக்தி இல்லாமல் மயக்கம் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை தொடர்கிறது.
இதைத்தடுக்க மக்கள் தங்கள் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை கோடை காலங்களில் உண்கின்றனர். சிலர் அஜாக்கிரதையாக கண்டு கொள்ளாமல் கடந்து செல்கின்றனர். அவர்கள் தான் இதுபோன்ற நீர்வறட்சி நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலும் நீர்வறட்சி நோயால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் வகையில் சில அறிவுரைகளை மத்திய அரசு உத்தரவில் தமிழக நேஷனல் ஹெல்த் மிஷன் சார்பில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளது.
அதில், கடுமையான வெயில் நேரங்களில் வெளியில் போக வேண்டாம். குடை பிடித்து செல்வது நல்லது. கோடை காலங்களில் தினமும் 4 லிட்டர் தண்ணீருக்கு மேல் குடிக்க வேண்டும்.
உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இளநீர்,மோர் போன்றவைகளை அதிகளவில் குடிக்க வேண்டும் என குறிப்பட்டுள்ளது. இதன் அறிவுரைகளை மருத்துவமனை நிர்வாகம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி உள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் அமலன் கூறியதாவது: நீர் வறட்சி நோய் கோடை காலங்களில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்தநேரங்களில் மக்கள் தங்கள் உடலில் நீர் சத்துக்களை குறையவிடாமல் அடிக்கடி நீராதாரங்களை குடிக்க வேண்டும்.
நீரிழப்பு வராமல் பாதுகாக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் வறட்சி நோயால் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. நீர் வறட்சி நோயின் அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு உடனே தீவிர சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

