sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தீ தடுப்பு உபகரணங்கள் இருந்தும் பயன்படுத்தாமல் தப்பி ஓடிய திண்டுக்கல் மருத்துவமனை ஊழியர்கள்  டாக்டர்கள், பணியாளர்களிடம் போலீஸ் விசாரணை  விதிமீறல் குறித்து விசாரிப்பதாக அமைச்சர் தகவல்

/

தீ தடுப்பு உபகரணங்கள் இருந்தும் பயன்படுத்தாமல் தப்பி ஓடிய திண்டுக்கல் மருத்துவமனை ஊழியர்கள்  டாக்டர்கள், பணியாளர்களிடம் போலீஸ் விசாரணை  விதிமீறல் குறித்து விசாரிப்பதாக அமைச்சர் தகவல்

தீ தடுப்பு உபகரணங்கள் இருந்தும் பயன்படுத்தாமல் தப்பி ஓடிய திண்டுக்கல் மருத்துவமனை ஊழியர்கள்  டாக்டர்கள், பணியாளர்களிடம் போலீஸ் விசாரணை  விதிமீறல் குறித்து விசாரிப்பதாக அமைச்சர் தகவல்

தீ தடுப்பு உபகரணங்கள் இருந்தும் பயன்படுத்தாமல் தப்பி ஓடிய திண்டுக்கல் மருத்துவமனை ஊழியர்கள்  டாக்டர்கள், பணியாளர்களிடம் போலீஸ் விசாரணை  விதிமீறல் குறித்து விசாரிப்பதாக அமைச்சர் தகவல்


ADDED : டிச 14, 2024 02:13 AM

Google News

ADDED : டிச 14, 2024 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்,:திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான நிலையில் தீயை கட்டுப்படுத்தும் அனைத்து உபகரணங்கள் இருந்தும் டாக்டர்கள், பணியாளர்கள் அச்சத்தில் வெளியில் ஓடியதும், நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் விபத்தில் சிக்கியதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக டாக்டர்கள், பணியாளர்களிடம் போலீஸ் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனை விதிமீறல் குறித்து விசாரிப்பதாக அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

திண்டுக்கல் -- திருச்சி ரோட்டில் உள்ள சிட்டி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நான்கு மாடி கட்டடங்களை கொண்ட இம்மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் நோயாளிகள், அவர்கள் உறவினர்கள், டாக்டர்கள், பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இரவு 9:20 மணிக்கு மருத்துவமனை முதல் தளத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் டாக்டர்கள், ஊழியர்கள் வெளியே ஓடி தப்பினர்.

தீயணைப்பு வீரர்கள் மூன்று வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீயிலிருந்து உருவான புகை மருத்துவமனை முழுவதும் பரவியது. நோயாளிகள், அவர்களது உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் வெளியில் வர முடியாமல் திணறினர். இதில் ஆறு பேர் பரிதாபமாக இறந்தனர். தீயணைப்பு வீரர்கள் 32 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விபத்து தொடர்பாக போலீசார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், பணியாளர்கள் உட்பட 5 முக்கிய பேரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து சென்றனர். தீயணைப்பு மீட்பு பணிகள் உதவி இயக்குநர் சரவணக்குமார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

உதவிய தன்னார்வலர்கள்


தீ விபத்து தகவல் அறிந்த தன்னார்வலர் அமைப்பினர் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களுடன் வந்து பாதிக்கப்பட்ட மக்களை உடனுக்குடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதே நேரத்தில் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்திலும் ஒருசிலர் நின்று கொண்டு அவ்வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் விதமாக போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு ஆம்புலன்ஸ்களை செல்ல வழிவகை ஏற்படுத்தினர்.

தன்னார்வலர்கள் தங்களது பணியை துரிதமாக செய்த நிலையில் விபத்து நடந்து ஒரு மணி நேரத்திற்கு போலீசார் கண்ணில் தென்பட வில்லை. ஆம்புலன்ஸ் உள்ளே வந்து செல்வதில் நெரிசலால் பெரும் சிரமம் ஏற்பட்ட நிலையில் போலீசார் இருந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். எல்லாம் முடிந்து ஓய்ந்த நேரத்தில் வந்த போலீசாரை அங்கிருந்தவர்களை விரட்டினர்.

அலட்சியத்தால் உயிர் பலி


சிட்டி மருத்துவமனையில் ஸ்மோக் டிடெக்டர், அதிக வெப்பம் வந்தால் தண்ணீர் வெளியாகும் கருவிகள் உள்ளிட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு தேவைப்படும் அனைத்து உபகரணங்களும் இருந்துள்ளன. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் உள் இருந்த டாக்டர்கள், ஊழியர்கள் அச்சமடைந்து தீத்தடுப்பு உபகரணங்களை உபயோகிக்காமல் வெளியே ஓடினர்.

அவர்கள் மின்கசிவு ஏற்பட்ட உடன் தீத்தடுப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தால் உயிர்சேதங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலா ரூ.3 லட்சம் நிவாரணம்


தீ விபத்தில் இறந்த மணி முருகன், அவரது தாய் மாரியம்மாள், ராஜசேகர், கோபிகா, தேனி மாவட்டம் சுப்புலட்சுமி, கணவர் சுருளி ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு காயத்திற்கு ஏற்ப ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்பட்டது.

விதிமீறல் குறித்து விசாரணை


திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சுப்பிரமணியன், சக்ரபாணி சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: தீ விபத்தில் ஒருவருக்கு மட்டுமே 10 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 41 பேருக்கு புகை மூட்டத்தால் மூச்சு திணறல் பாதிப்பு, நெருக்கடியில் காயங்களும் ஏற்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.37.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான மருத்துவமனையில் போலீஸ் விசாரணை நடக்கிறது.

மருத்துவமனை கட்டமைப்பில் உள்ள விதிமீறல் குறித்தும் விசாரிக்கப்படும். இதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us