/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்ட விளையாட்டு போட்டி கே.ராமநாதபுரம் பள்ளி முதலிடம்
/
மாவட்ட விளையாட்டு போட்டி கே.ராமநாதபுரம் பள்ளி முதலிடம்
மாவட்ட விளையாட்டு போட்டி கே.ராமநாதபுரம் பள்ளி முதலிடம்
மாவட்ட விளையாட்டு போட்டி கே.ராமநாதபுரம் பள்ளி முதலிடம்
ADDED : செப் 01, 2024 03:46 AM
வேடசந்துார், : வேடசந்துார் வட்டார அளவிலான குழு விளையாட்டு ,தடகளப் போட்டிகள் வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் திண்டுக்கல் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இதில் பங்கேற்ற கே. ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குழு விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம், தடகளப் போட்டிகளில் 2ம் இடம், மாணவர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம், தடகளம் 2 ம் இடம் என ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதில் மாணவர் ஜீவானந்தம் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் , 1500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் முதலிடம், 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில்
2 ம் இடம் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.மாணவி சந்தியா 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் , 800 மீட்டர் , 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் முதலிடம், தடை தாண்டும் போட்டியில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ஆனந்த், உதவி தலைமை ஆசிரியர்கள் வீரமணி, முத்துமீனா, உடற்கல்வி ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில் வடிவு, சத்தியஜோதி பாராட்டினர்.