/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் தி.மு.க., பிரமுகர் வெட்டிக்கொலை
/
திண்டுக்கல்லில் தி.மு.க., பிரமுகர் வெட்டிக்கொலை
ADDED : மே 24, 2024 10:22 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் மாயாண்டி ஜோசப், 60. இவரது மனைவி நிர்மலா; அடியனுாத்து ஊராட்சி முன்னாள் தலைவராக - தி.மு.க., இருந்தார். இவர் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மாயாண்டி ஜோசப், யாகப்பன்பட்டியில் பல ஆண்டாக டாஸ்மாக் பார் நடத்தினார். மூத்த மகளுக்கு திருமணமான நிலையில் இரண்டு குழந்தைகளும் வெளியூரில் படிக்கின்றனர்.
மாயாண்டி ஜோசப் தனியாக வேடப்பட்டியில் வசித்தார். நேற்றிரவு 8:00 மணிக்கு அவர் யாகப்பன் பட்டியில் உள்ள தன் பாரிலிருந்து டூ - வீலரில் வேடப்பட்டிக்கு வந்தார். இவருக்காக காத்திருந்த நால்வர் எதிர் திசையில் டூ - வீலரில் வந்து மாயாண்டி ஜோசப் மீது மோதினர். நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து தப்பினர். முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர். இவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரிவித்தனர்.