/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நெரிசலான பகுதிகளில் வேண்டாம் பொதுக்கூட்டம்
/
நெரிசலான பகுதிகளில் வேண்டாம் பொதுக்கூட்டம்
ADDED : ஏப் 14, 2024 06:35 AM
திண்டுக்கல்: அரசியல் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம், போராட்டம் போன்றவை நெரிசல் மிகுந்த பகுதிகளில் நடத்த அனுமதி மறுப்பதோடு, விதிமீறினால் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம், அரசியல் பொதுக்கூட்டம், தெருமுனை கூட்டம் என நடந்து வருகிறது. இது நடத்தப்படுவதோ மக்கள் பயன்படுத்தும் ரோடுகளைதான். அரசியல் கட்சியினர் தங்களின் பலத்தை நிரூபிப்பதற்காக போட்டி போட்டு பொதுமக்களை பல்வேறு பகுதிகளில் இருந்து திரட்டி ஒன்று சேர்க்கின்றனர்.
குறிப்பிட்ட நேரத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறதா என்றால் இல்லை. போலீசாரிடம் தெரிவித்த நேரத்திலிருந்து 1 அல்லது 2 மணி நேரம் கழித்துதான் தொடங்குகிறது. நிகழ்ச்சி நடக்கும் ரோடானது முடக்கப்படுகிறது அல்லது நெரிசல் ஏற்படுகிறது.
திண்டுக்கல் நாகல்நகர் பிரதான ரோடு, என்.ஜி.ஓ., காலனி திருச்சி ரோடு, மணிக்கூண்டு போன்ற பகுதிகளில் தான் பெரும்பாலான கூட்டங்கள் நடக்கின்றன. பொதுமக்கள் எந்நேரமும் பயன்படுத்தும் ரோடாக இருக்கிறது. இங்கு கூட்டம் நடத்தப்படுவதால் நாள் முழுவதும் இந்த பகுதியை பயன்படுத்த முடியாமல் போகிறது. ரவுண்ட்ரோடு, புறநகர் பகுதியில் உள்ள அங்குவிலாஸ் மைதானம், மாரியம்மன் கோயில் திடல் போன்றவற்றை கூட்டங்களுக்கு பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். நெரிசல் இல்லாத,மக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில் கூட்டங்களை நடத்த போலீசாரும், அரசியல் கட்சியினரும் முயற்சிக்க வேண்டும்.

