/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாச்சலுாரில் மஞ்சள் நிறத்தில் குடிநீர்; மக்கள் அவதி
/
பாச்சலுாரில் மஞ்சள் நிறத்தில் குடிநீர்; மக்கள் அவதி
பாச்சலுாரில் மஞ்சள் நிறத்தில் குடிநீர்; மக்கள் அவதி
பாச்சலுாரில் மஞ்சள் நிறத்தில் குடிநீர்; மக்கள் அவதி
ADDED : ஆக 08, 2024 05:24 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாச்சலுாரில் குடிநீர் மஞ்சள் நிறமாக சப்ளை செய்யப்படுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாச்சலுார் ஊராட்சி கடைசிகாட்டிற்கு பொட்டியாத்தா அம்மன் கிணறு மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்தநீர் மஞ்சள் நிறத்துடன் கலங்கலாக சப்ளை ஆகிறது. குடிப்பதற்கு, சமைப்பதற்கும் பயன்ற்ற நிலையில் உள்ளதால் அருகிலுள்ள விவசாய தோட்டங்களிருந்து நாள்தோறும் குடிநீர் எடுக்கும் அவலம் உள்ளது. ஊராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள் .
நாகராஜ்,கூலித் தொழிலாளி : துவக்கத்தில் ஆழ்துளையிலிருந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. பின் கிணற்றிலிருந்து கலங்களாக , மஞ்சள் நிறத்துடன் சப்ளை செய்யப்படுகிறது.
சுகாதாரமற்ற குடிநீர் சப்ளை குறித்து ஊராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆழ்துளையிலிருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டு கிணறு மூலமே சப்ளை செய்கின்றனர். மாதந்தோறும் குடிநீர் தொட்டியும் சுத்தம் செய்வதில்லை. தங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்றார். மீனா, கூலித் தொழிலாளி : குடிநீரை காய்ச்சும் நிலையில் மஞ்சள் நிறமாக எண்ணெய் போன்ற திரவம் மிதக்கிறது.
இதை பருகும் நிலையில் தொண்டையில் அரிப்பு, அடைப்பு உள்ளிட்ட ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன.
துவக்கத்தில் வழங்கப்பட்டது போன்று ஆழ்துளை மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.
தயாநிதி, ஊராட்சித் தலைவர் : பொட்டியாத்தா அம்மன் கிணறு மூலம் துவக்கத்தில் பாச்சலுார் பகுதி முழுதும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அப்போது இதுபோன்ற பிரச்னை இல்லை.
தற்போதும் தண்ணீர் நல்ல நிலையில் தான் உள்ளது. வேறு குடிநீர் திட்டம் ஏற்படுத்த கோரிக்கை விடுத்த போதும் பணம் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆதிதிராவிட நலத்துறை மூலம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.