/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மூதாட்டி இறந்த வழக்கில் டிரைவருக்கு சிறை
/
மூதாட்டி இறந்த வழக்கில் டிரைவருக்கு சிறை
ADDED : ஜூன் 01, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்டில் 2023ல் அரசு பஸ் மோதி மூதாட்டி இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கோபால்பட்டி அருகே பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் காட்டுவா. இவரது மனைவி பிச்சையம்மாள் 68.
2023 பிப்.13ல் நத்தம் பஸ் ஸ்டாண்ட்டில் நின்ற போது சாணார்பட்டியை சேர்ந்த செல்வராஜ் ஓட்டி வந்த பஸ் பிச்சையம்மாள் தலையின் மீது ஏறி இறங்கியதில் இறந்தார்.
இவ்வழக்கு நத்தம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி உதயசூரிய அரசு பஸ் டிரைவர் செல்வராஜ்க்கு ஓராண்டு சிறை தண்டனை , ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.