தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சர்ச்களில் ஈஸ்டர் கொண்டாட்டம்

சர்ச்களில் ஈஸ்டர் கொண்டாட்டம்

சர்ச்களில் ஈஸ்டர் கொண்டாட்டம்


ADDED : ஏப் 01, 2024 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2024 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சர்ச் களில் ஈஸ்டர் தினத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

திண்டுக்கல் மணிக்கூண்டு புனித வளனார் சர்ச்சில் ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா இரவு நிகழ்ச்சியாக எந்நாளும் உங்களோடு' என்ற மைய கருத்திலான தலைப்பில் ஆயர் தாமஸ் பால்சாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

பாதிரியார்கள் மரிய இஞ்ஞாசி, டோம்னிக் சேவியர், அந்தோணி சாமி கூட்டு திருப்பலி நடத்தினர். திருப்பலிக்கு இடையில் அதிகாலை 12:00 மணிக்கு ஏசு உயிர்தெழும் ஒளி வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. திருப்பலியில் பங்கேற்றவர்கள் மெழுகுவர்த்தி தீபம் ஏந்தி ஜெபிக்க, விழா மேடையில் ஏசு உயிர்த்தெழுந்து வருவதை போன்ற தத்ரூப காட்சி அரங்கேறியது. காலை 8:00, மாலை 6:30 மணி திருப்பலியானது புது உலகம் படைப்போம்' என்ற மையக்கருத் தில் நற்செய்தி அறிவிப்பு ஜெபக்கூட்டமாக நடந்தது. காலை திருப்பலிக்கு பின் குழந்தைகளுக்கு திருமுழுக்கு நிகழ்ச்சி நடந்தது.

மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை, சவேரியார் பாளையம், குமரன் திருநகர், மரியநாதபுரம் உட்பட்ட பகுதிகளில் உள்ள சர்ச்களில் கூட்டு திருப்பலி நடத்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

நத்தம்: நத்தம் புனித ராயப்பர் சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.இதில் சிலுவையை கொடியை ஏந்தியபடி இயேசு பிரான் உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கபட்டது. மெழுகுவர்த்திகள் ஏற்ற பாஸ்கோ ஒளி காண்பிக்கபட்டது. பாதிரியார் ஜான்பிரிட்டோ தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. சர்ச் வண்ண விளக்கு,மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நத்தம் இம்மானுவேல் சேகரன் சர்ச்சிலும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us