/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இன்று முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
இன்று முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஜூன் 26, 2024 06:48 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 48 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பஸ் ஸ்டாடண்ட்,திண்டுக்கல் மெயின்ரோடு,தெற்கு ரதவீதி,மேற்கு ரதவீதி,மதுரை ரோடு,திருச்சி ரோடு,பழநி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதையடுத்து கமிஷனர் ரவிச்சந்திரன் திண்டுக்கல் நகர் முழுவதும் ஆய்வு செய்து மக்களுக்கு இடையூறாக எங்கெல்லாம் ஆக்கிரமிப்புகள் உள்ளதோ அவற்றையெல்லாம் அகற்ற உத்தரவிட்டார்.
அதன்படி மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் இன்று முதல் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்,பழநி ரோடு,மெயின்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளனர். பொதுமக்கள்,வியாபாரிகள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.