/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்
/
அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்
ADDED : மே 04, 2024 06:34 AM

ஒட்டன்சத்திரம்: இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2002 ல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் இலவச சீருடைகள் வழங்கியும், கழிப்பறைகளை கட்டிக் கொடுத்தும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவி செய்துள்ளனர்.
இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2002 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சந்தித்துக் கொண்டு தங்களது மலரும் நினைவுகளை சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டனர். பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்த அவர்கள், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் மாணவிகளுக்காக நவீன கழிப்பறை கட்டிக் கொடுத்தனர். தாங்கள் படித்த ஆசிரியர்கள் கொண்டு திறந்து வைத்தனர். பள்ளி மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான இலவச சீருடைகளை வழங்கினர். பள்ளியின் தற்போதைய ஆசிரியர்கள், தாங்கள் பயின்ற போது பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மாலை அணிவித்து விழா நடக்கும் மேடைக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.