/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விலை உயர்ந்த கொத்தமல்லி விலை குறைந்த சேனைக்கிழங்கு
/
விலை உயர்ந்த கொத்தமல்லி விலை குறைந்த சேனைக்கிழங்கு
விலை உயர்ந்த கொத்தமல்லி விலை குறைந்த சேனைக்கிழங்கு
விலை உயர்ந்த கொத்தமல்லி விலை குறைந்த சேனைக்கிழங்கு
ADDED : மே 30, 2024 04:11 AM
திண்டுக்கல்: மழையால் வரத்து குறைந்ததன் காரணமாக திண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டில் கொத்தமல்லி கட்டின் விலை இருமடங்கு உயர்ந்து ரூ.180க்கு விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் சேனைக்கிழங்கு விற்பனையும் குறைந்துள்ளது.
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
இங்கு செம்பட்டி, சின்னாளப்பட்டி, கலிக்கம்பட்டி, பெருமாள்கோவில் பட்டி, வத்தலகுண்டு, தாமரைப்பாடி, வடமதுரை, அய்யலுார், வேடசந்துார் உட்பட பல பகுதிகளில் விளையக்கூடிய காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். கேரட், பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகள் கொடைக்கானல், ஊட்டி போன்ற மழை பிரதேசங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
தற்போது கோடை மழை பெய்ததன் காரணமாக காய்கறி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துள்ளது.
இதில் கொத்தமல்லி வரத்து மிகவும் குறைந்துள்ளது.
ஓசூரிலிருந்து நாள் ஒன்றுக்கு 40 கிலோ எடை கொண்ட 200 சிப்பம் விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது 100 சிப்பம் மட்டுமே வருகிறது.
இதனால் இதன் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
15 நாட்களுக்கு முன்பு வரை 700 முதல் 900 கிராம் எடை கொத்தமல்லி கட்டு ரூ.50க்கு விற்ற நிலையில், தற்போது வரத்து குறைவால் மொத்த விற்பனையில் ரூ,150, சில்லறை விற்பனையில் ரூ.180க்கு விற்பனையாகிறது.
இதனால் உள்ளூர் காய்கறி கடைகளில் கூட கொத்தமல்லி இலவசமாக கொடுப்பதில்லை.
மழை குறைந்து மீண்டும் வரத்து அதிகரித்தால் மட்டுமே இதன் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கரூர் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் சேனைக்கிழங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
சில நாட்களாக வரத்து அதிகரித்திருந்ததால் சேனை விலை குறைந்து கிலோ ரூ.65க்கு விற்பனை ஆனது.
மழை, முகூர்த்த விழாக்களை முன்னிட்டு தக்காளி, முருங்கை, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது.
பீன்ஸ் கிலோவிற்கு ரூ.8 குறைந்து ரூ.57 க்கு விற்றது.
வரத்து வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விலை இன்னும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.