ADDED : மே 08, 2024 06:16 AM

வடமதுரை : வடமதுரையில் 12ம் வகுப்பு படித்துவிட்டு 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் காளிதாஸ் 58, கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் காளிதாஸ் 58. வடமதுரையில் காளியம்மன் கோயில் அருகில் சிறிய அறையை வாடகைக்கு எடுத்து 35 ஆண்டுகளுக்கு மேலாக கிளினிக் நடத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் போலி டாக்டர் களையெடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்தபோது கைது நடவடிக்கைக்கு உள்ளாகியும், மீண்டும் அதே இடத்தில் தனது கிளினிக்கை தொடர்ந்து வந்தார். இவர் மீதான புகாரில் திண்டுக்கல் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் திடீரென ஆய்வு நடத்தினார். உரிய படிப்பு தகுதியின்றி ஆங்கில மருத்துவம், ஊசிபோடுதல் உள்ளிட்டவற்றை செய்த நிலையில் சிக்கிய காளிதாஸ் வடமதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

