/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மஞ்சளாற்று படுகைக்கு வெள்ள எச்சரிக்கை
/
மஞ்சளாற்று படுகைக்கு வெள்ள எச்சரிக்கை
ADDED : மே 31, 2024 06:13 AM

வத்தலக்குண்டு : தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மஞ்சளாறு பாசனத்தின் மூலம் வத்தலக்குண்டு ஒன்றியத்தில் 1500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கட்ட காமன்பட்டி, பழைய வத்தலக்குண்டு, கண்ணாபட்டி கூட்டாத்து அய்யம்பாளையம் சிவஞானபுரம் புலி செட்டிபட்டி பிள்ளையார் நத்தம் எத்திலோடு ஆவாரம்பட்டி கண்மாய்கள் இதன் மூலம் பயனடைகின்றன.
சில நாட்களாக பெய்த மழைக்கு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 57 அடி கொண்ட மஞ்சளாறு அணைக்கு வினாடிக்கு 23 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.
தற்போது 51 அடியை எட்டிய நிலையில் பொதுப்பணித்துறையினர் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ளவர்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டிவீரன்பட்டி: இது போல் 74 அடி கொண்ட அய்யம்பாளையம் மருதாநதி அணையின் நீர்மட்டம் 68 அடியை எட்டி உள்ளது. வினாடிக்கு 21 கன அடி தண்ணீர் வந்து உள்ள நிலையில் 10 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.