ADDED : மே 29, 2024 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துார் மாரியம்மன் கோயில் வைகாசி துவக்க விழாவாக கம்பம் அலங்கரித்து நகர் வலம் வருதல், கரகம் பாவித்தல், வான வேடிக்கை, அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
நேற்று மாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை மஞ்சள் நீராட்டுடன் கம்பம் ஆற்றுக்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.