/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபத்து அச்சத்தில் ரோட்டோர கிணறு தடுப்பு சுவர்
/
விபத்து அச்சத்தில் ரோட்டோர கிணறு தடுப்பு சுவர்
ADDED : மே 08, 2024 05:38 AM

சரக்கு வாகனத்தில் ஆட்கள்
திண்டுக்கல்லில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது . இதோடு வாகனங்களும் அதிக வேகமாக செல்கிறது ,ஆட்களை ஏற்றி செல்லும் வாகனத்தை போலீசார் கண்காணிக்க வேண்டும். சிவக்குமார், திண்டுக்கல்.
............-------
விபத்து அபாயத்தில் கிணறு
வடமதுரை ஏ.வி.பட்டியில் இருந்து தொட்டையகவுண்டனுார் செல்லும் ரோட்டில் விபத்து ஆபத்தை தவிர்க்கும் நோக்கில், ரோட்டோர கிணற்றிற்காக அமைக்கப்பட்ட தடுப்புவேலி சுவர் சேதமடைந்து கிடக்கிறது. இதை சீரமைக்க வேண்டும்.கந்தசாமி, வடமதுரை.
:::::::::
கருவேல மரங்களால் ஆபத்து
வத்தலக்குண்டு வ.உ.சி.நகர் ,பட்டிவீரன்பட்டி குறுக்கு ரோடு குடியிருப்புப் பகுதியில் சீமைக்கருவேலை மரங்கள் வளர்ந்துள்ளதால் பாம்புகளின் புகலிடமாக மாறியுள்ளதால், இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் அதிக அளவில் ரோட்டில் செல்கிறது ரவி, வத்தலக்குண்டு.
...................--------சாக்கடையில் குப்பை
சீலப்பாடி கணேஷ் நகர் கோதாவரி தெருவில் உள்ள சாக்கடையில் குப்பை அடைப்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது .இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. கால்வாயை தூர்வாரி கழிவுநீர் கடக்க நடவடிக்கை வேண்டும் தா.சுரேஷ்குமார், கணேஷ்நகர்.
...................----------இறைச்சிக் கழிவுகளால் நோய்
நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு அன்ன சமுத்திரகுளத்தில் குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது .இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது . சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். க.ரதிஷ்பாண்டியன்.பொம்மணம்பட்டி.
.................----------குளத்தில் விடப்படும் கழிவு நீர்
புதுச்சத்திரம் ஊராட்சி சார்பில் அமைக்கப்படும் சாக்கடை பொம்மநல்லுார் குடிநீர் ஆதாரமாக இருக்கும் குளத்தில் கழிவு நீர் விடும் வகையில் அமைப்பதால் நீர் அசுத்தமாகும் அபாயம் உள்ளது. இதை தடுக்க வேண்டும். கி, ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.
மின் கம்பம் சேதம்
திண்டுக்கல் அருகே என்.எஸ். நகர் போஸ்டல் காலனி 4வது தெருவில் மின் கம்பம் சேதமடைந்துள்ளதால் எந்த நேரத்திலும் விபத்து அபாயம் உள்ளது. இதன் அருகே செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர் . சந்துரு, என்.எஸ். நகர்.---------
,.....................

