ADDED : செப் 11, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் மிட்டவுன் திண்டுக்கல் கூட்டறவு நலச்சங்கம், காந்திஜி நலச்சங்கங்கள் இணைந்து இலவச மருத்துவ பரிசோதனை நடந்தது.
ரூ.4 ஆயிரம் மதிப்பு பரிசோதனைகளை இலவசவமாக ஆர்.எஸ்.எஸ்.டி.ஐ., தமிழ்நாடு சாப்டர், திண்டுக்கல் விஜய கிளினிக் இணைந்து பரிசோதனைகள் மேற்கொண்டனர். ரோட்டரி சங்க தலைவர் நாகராஜன், செயலர் ரவிசங்கர், பிளாஸம் நிர்வாகி பாஸ்கரன், கூட்டுறவு நலச்சங்க தலைவி திராவிடராணி, செயலர் அமரசுந்தரி, பொருளாளர் சசிகலா, காந்திஜி நகர் சங்க தலைவி புவனேஸ்வரி, செயலர் சித்ரா, பொருளாளர் சித்ரா கலந்து கொண்டனர். டாக்டர் முரளிதரன் பேசினார். செயலர் ரவிசங்கர் நன்றி கூறினார்.