/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்
/
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்
ADDED : செப் 09, 2024 04:23 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல்லில் சிவசேனா, ஹிந்து தர்ம சக்தி ஆகிய அமைப்பினர் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 20க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம் மநகராட்சி ரோடு, கடைவீதி வழியாக கோட்டை குளம் கொண்டு செல்லப்பட்டது.
போலீசார் பாதுகாப்போடு சிலைகள் கரைக்கப்பட்டது.
* கொடைக்கானலில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
நாயுடுபுரத்தில் துவங்கிய ஊர்வலம் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் சிலைகள் கரைக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
*வத்தலக்குண்டில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. காளியம்மன் கோயில் அருகே தொடங்கப்பட்ட ஊர்வலத்தில் வத்தலக்குண்டு, விருவீடு, ஜீ.தும்மலப்பட்டி, எம்.வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 30-க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கொண்டுவரப்பட்டது. வத்தலக்குண்டு முக்கிய வீதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது.
விநாயகர் சிலைகள் கண்ணாபட்டி வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. நிலக்கோட்டை, கொடைரோடு, அய்யம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
*வடமதுரையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.
ஒன்றிய தலைவர் ஐயப்பன், செயலாளர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். தேவேந்திர குல கூட்டமைப்பு மாநில செயலாளர் நடராஜன் துவக்கி வைத்தார்.
ஹிந்து மக்கள் கட்சி நகர செயலாளர் பாலன், சிவசேனா மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் பங்கேற்றனர்.
* ஹிந்து முன்னணி சார்பில் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இவை அனைத்தும் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை ஊர்வலம் துவங்கியது. மாவட்டத் துணைத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்ரமணியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பார்த்திபராஜன் வரவேற்றனர். நகரத் தலைவர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர்கள் ராஜா, நாவல்துறை முன்னிலை வகித்தார்.
மாநில பேச்சாளர் பிரபாகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் மாரிமுத்து,பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் அண்ணாமலை, ஒன்றிய தலைவர்கள் ரகுபதி, ருத்ரமூர்த்தி, நகர துணை தலைவர் மாரிமுத்து பங்கேற்றனர்.
திரைப்பட நடிகர், பா.ஜ., கலை கலாச்சாரபிரிவு மாநில துணைத்தலைவர் விக்னேஷ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
செக்போஸ்டில் துவங்கிய ஊர்வலம் பழநி ரோடு, தாராபுரம் ரோடு, ஏ.பி.பி. நகர் வழியாக விருப்பாச்சி தலையூற்று, பகுதிக்குச் சென்றது.
அங்கு அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டது.
* நத்தம் கோவில்பட்டியிலிருந்து ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பழனி ஜெகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர பொதுச் செயலாளர் வெங்கடேசபிரசாத் வரவேற்றார்.
விநாயகர் சிலைகள் பூமாலைகளால் அலங்கரிக்கபட்ட வாகனங்களில் ஆட்டம் பாட்டத்துடன் நத்தம்- கோவில்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தொடங்கிய ஊர்வலம் தர்பார் நகர், பஸ்ஸ்டாண்ட், மூன்றுலாந்தர், அவுட்டர் சாலை, வழியாக அம்மன் குளத்தை சென்றடைந்தது.
பின்னர் அங்கு விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் தீபாராதனைக்கு பின்னர் அம்மன் குளத்தில் போய் கரைக்கபட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் தாசில்தார் சரவணக்குமார், டி.எஸ்.பி., சாய் சிபின்சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி செய்தனர்.