/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில் கட்டுவதற்கு அனுமதி கொடுங்க: முறையாக நடக்காத கிராம சபை கூட்டம் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
/
கோயில் கட்டுவதற்கு அனுமதி கொடுங்க: முறையாக நடக்காத கிராம சபை கூட்டம் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
கோயில் கட்டுவதற்கு அனுமதி கொடுங்க: முறையாக நடக்காத கிராம சபை கூட்டம் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
கோயில் கட்டுவதற்கு அனுமதி கொடுங்க: முறையாக நடக்காத கிராம சபை கூட்டம் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
ADDED : ஆக 20, 2024 12:59 AM
திண்டுக்கல் : சர்ச்க்குள் புகுந்து மிரட்டுறாங்க, கோயில் கட்டுவதற்கு அனுமதி கொடுங்க,குடிநீர் வழங்குங்க, கிராம சபை கூட்டம் முறையாக நடத்துங்க என திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் ஏராளமானோர் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி முறையிட்டனர்.
கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 323 மனுக்கள் பெறப்பட்டது. திண்டுக்கல் கொடைக்கானல் தாண்டிக்குடியை சேர்ந்த கணேஷ்பாபு கொடுத்த மனுவில், ஆக.15ல் கிராம சபை கூட்டம் எல்லா ஊராட்சிகளிலும் நடத்த அறிவிக்கப்பட்டது. ஆனால் சில ஊராட்சிகளில் நடக்கவில்லை. எல்லா ஊராட்சிகளிலும் முறையாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.
அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தர். திண்டுக்கல் எல்லைப்பட்டி,ராமலிங்கபட்டி,கட்டசின்னான்பட்டி பகுதி மக்கள் கொடுத்த மனுவில்,எங்கள் பகுதிகளில் பாதாள செம்பு முருகன் கோயில் சார்பாக பல இடங்களில் குடிநீர் வழங்கப்படுகிறது.
அதை தடுக்கும் வகையில் காமாட்சிபுரம் ஊராட்சி தலைவர்,செயலாளர் செயல்படுகின்றனர். இதனால் கோயில் நிர்வாகத்தினர் தண்ணீர் வழங்காமல் நிறுத்தினர்.
ஊராட்சி சார்பிலும் தண்ணீர் வழங்காமல் மக்கள் தவிக்கின்றனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளனர்.
திண்டுக்கல் நி.பஞ்சம்பட்டி ஊர்த்தலைவர் சதீஷ்குமார் ராயப்பன் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கிறிஸ்தவ சமூதாய மக்கள் 25 ஆயிரத்திற்கும் மேல் வசிக்கிறோம். சில நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சர்ச்சுக்குள் புகுந்து பொது மக்களை மிரட்டினார்.
இதனால் எங்கள் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கம் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் முத்துரத்தினவேல் கொடுத்த மனுவில், திண்டுக்கல் கம்பிளியம்பட்டி நரிவிலாப்பட்டியில் இருதரப்பு மக்கள் சேர்ந்து ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயிலை கட்டி திருவிழா நடத்தினோம். தற்போது இரு சமூகத்தினருக்கும் இடையே பிரச்னை உள்ளது. அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தனியாக கோயில் கட்டுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

