/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்
/
'கொடை'யில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்
ADDED : ஜூன் 10, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி : கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப் பகுதியில் தொடர்மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. இப்பகுதிகளில் சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில், வறண்ட வானிலை நீடித்தது. தொடர்ந்து வளிமண்டல மேலடுக்க சுழற்சி தென்மேற்கு பருவமழை எதிரொலி என சில வாரங்களாக மலைப்பகுதியில் கன மழை வெளுத்து வாங்கியது.
நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து தலையாறு, மூலையார், புலிச்சோலை, வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல், தேவதை அருவி, கரடிச்சோலை, புல்லா வெளி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தது. வெள்ளியை உருக்கியது போன்று கொட்டும் அருவிகளை சுற்றுலா பயணிகள் ரசித்துச் செல்கின்றனர்.