/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 29, 2024 05:46 AM
பெருமாள்கோவில்பட்டி : பெருமாள்கோவில்பட்டி கணேசன் உள்ளிட்ட 3 பேர் உயர்நீர்திமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:பெருமாள்கோவில்பட்டியில் கதிர்நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இது அறநிலையத்துறைக்குட்பட்டது. இதற்கு சொந்தமாக அம்பாத்துரையில் 18.32 ஏக்கர் நிலம் உள்ளது.
இதை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வீடுகள் அமைத்துள்ளனர். அகற்றக்கோரி கலெக்டர், ஆர்.டி.ஓ.,அறநிலையத்துறை உதவி கமிஷனர், ஆத்துார் தாசில்தாருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அரசு தரப்பில் நோட்டீஸ் அளித்து விசாரிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் உறுதியாகும்பட்சத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை 6 மாதங்களில் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.