/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பறவைகளை கண்காணிக்கும் தோட்டக்கலை அலுவலர்
/
பறவைகளை கண்காணிக்கும் தோட்டக்கலை அலுவலர்
ADDED : மார் 05, 2025 06:31 AM

இயற்கையின் மீது கொண்ட காதலால் பறவைகள், பூச்சியினம், வனவிலங்கு,தாவரங்கள், பூக்களை அழகுற வண்ண படங்களாக ஆக்கி அலாதி இன்பம் காண்பதை வாழ்வின் லட்சியமாக கொண்டுள்ளார் கொடைக்கானலை சேர்ந்த தோட்டக்கலை அலுவலர் பார்த்தசாரதி.
கல்லுாரி படிப்பின் போதே இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட இவர் தோட்டக்கலை அலுவலராக கொடைக்கானலில் பணிபுரிந்த போது 2019ல் கொரோனா ஏற்படவே அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இவர், கொடைக்கானலை சுற்றி தனது கேமரா மூலம் பறவை, வனவிலங்கு, பட்டாம்பூச்சி உள்ளிட்டவற்றை பொழுதுபோக்கிற்காக புகைப்படம் எடுத்தார். காலப்போக்கில் வன உயிரினங்களின் பரிணாம நிகழ்வுகள், மாற்றங்களையும் பதிவு செய்தார். இதுவரை கொடைக்கானலில் நுாற்றுக்கு மேற்பட்ட பறவை இனங்களை அடையாளம் கண்டு தனது புகைப்பட திறமையால் அவற்றின் செயல்பாடுகளை காலை, மாலையில் கண்காணித்துள்ளார். சமீபத்தில் பறவை ஆர்வலர்கள் பறவைகள் செல்லும் பகுதி அவற்றின் இனப்பெருக்கம் உள்ளிட்டவற்றை கண்டறிய கால்களில் டேக் பொருத்தி கண்காணித்தனர். அதே நிலையில் இவர் பறவைகளை கொடைக்கானல் ஏரிச்சாலை, பாம்பே சோலை, லோயர் சோலை வில்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் உள்ள பறவைகளை தனது கேமரா மூலம் கண்காணிக்கிறார்.
பொறுப்பாக இருக்க வேண்டும்
பார்த்தசாரதி, தோட்டக்கலை அலுவலர் , கொடைக்கானல்: கொடைக்கானல் இயற்கை தந்த அருட்கொடையாகும். இங்கு சுற்றுலா மட்டுமல்லாது இயற்கை சார்ந்து ஏராளமான வனம் சார்ந்த உயிரினங்கள் வாழ்கின்றன.
நுாற்றுக்கு மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. இவற்றை காக்க மக்கள் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும்.
முதலில் இவற்றின் உணவு சங்கிலியை அதிகரிக்க பழவகை மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தங்களது பழக்கங்களை மனிதராகிய தாங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத வனமாக பிளாஸ்டிக் குப்பையை தவிர்க்க வேண்டும். ஒலி மாசு இல்லாமல் பறவை இனங்களை காக்க வேண்டும் என பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்களிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.
மேக்பீ ராபீன்.