ADDED : மே 12, 2024 04:21 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024---25ம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை முகாம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா தலைமையில் நடந்தது.
உடற்கல்வி ஆய்வாளர் ரஹமத்கனி முன்னிலை வகித்தார். இரண்டு நாட்கள் நடந்த இதில் பயிற்சியாளர்கள் ராமசந்திரன், ரேகா, கலையரசி, முத்துக்குமார், கார்த்திக் பங்கேற்றனர். மே 10ல் நடந்த மாணவிகளுக்கான தேர்வில் 24, தேர்வில் 112 பேரும் பங்கேற்றனர். 6முதல் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த சேர்க்கை முகாமில் தடகள போட்டிகளான 600, 800, 1500 மீ., ஓட்டபந்தயம், குண்டு எறிதல், நீளம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு பின் விளையாட்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க படுவர் என மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா தெரிவித்தார்.