/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓட்டளிக்க தவறினால் தி.மு.க., தில்லுமுல்லு வேலையை காட்டும்: திண்டுக்கல்லில் தே.மு.தி.க., பிரேமலதா பேச்சு

ADDED : ஏப் 13, 2024 02:38 AM
திண்டுக்கல் : ''லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க தவறாதீர்கள். இல்லையேல் தி.மு.க., தில்லுமுல்லு செய்துவிடும்,'' என தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா பேசினார்.
திண்டுக்கல் அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக் ஆதரித்து திண்டுக்கல் நாகல்நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: விஜயகாந்த் மறைவிற்குப் பின் உருவான மகத்தான கூட்டணி இதுவாகும்.
2021ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் வெற்றி களம் கண்ட கூட்டணி இதுவாகும். அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா இல்லாத முன்னாள் முதல்வர் பழனிசாமியும், தே.மு.தி.க.,வில் விஜயகாந்த் இல்லாத நாங்களும் சந்திக்கும் இந்த தேர்தல் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.
வேட்பாளர் முகமது முபாரக்கை வெற்றி பெற செய்தால் மாவட்டத்தின் அடையாளமான பூட்டு தொழிலை வளப்படுத்தி வேலை வாய்ப்பு உருவாக்கி தருவோம்.
சிறுமலையை சிறந்த சுற்றுலாத்தளமாக்குவோம். நீச்சல் பயிற்சி குளத்தை ஊராட்சி, நகராட்சி எங்கும் அமைத்து கொடுப்போம்.
பழநி வையாபுரி குளத்தை சீரமைப்போம். சின்னாளப்பட்டி நெசவு தொழிலை மீண்டும் வளம்பெற செய்வோம். விவசாயமும், நெசவும் இரண்டு கண்கள் என்ற விஜயகாந்தின் கனவை நினைவாக்குவோம். அரசு சட்ட கல்லுாரி அமைப்போம். காரைக்குடி, நத்தம் வழித்தட புதிய ரயில் பாதை திட்டம் கொண்டு வருவோம். முருக பவனம் குப்பை மேட்டை சரி செய்யும் நடவடிக்கை தொடரும்.
அ.தி.மு.க., வில் உள்ள தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., ஆகிய மூன்று கட்சிகளும்4 எழுத்திலான வெற்றி கூட்டணியாகும்.
தேர்தலில் முதல் ஆளாகா சென்று ஓட்டளித்து விடுங்கள். இல்லை என்றால் தி.மு.க., தில்லுமுல்லு செய்துவிடும் என்றார். முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விஸ்வநாதன் தலைமை வகித்தனர்.