sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

/

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்


ADDED : ஆக 16, 2024 05:02 AM

Google News

ADDED : ஆக 16, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி,கல்லுாரிகள்,தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

78 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் பூங்கொடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். போலீஸ், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்கள்,வண்ண பலுான்கள் பறக்கவிடப்பட்டது. எஸ்.பி., பிரதீப், டி.ஆர்.ஓ.,சேக் முகையதீன் முன்னிலை வகித்தனர். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்த 100 அலுவலர்களுக்கும், அரசுத் துறைகளைச் சார்ந்த 182 அலுவலர்களுக்கும் பதக்கம்,பாராட்டுச் சான்றிதழ்,84 பயனாளிகளுக்கு ரூ.80.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பூங்கொடி வழங்கினார். மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

முன்னதாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் பொன்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் பங்கேற்றனர். தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் நடந்த சுதந்திர தினவிழாவில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி கொடியேற்றினார். திண்டுக்கல் மாநகராட்சியில் மேயர் இளமதி தலைமையில் கொடியேற்றப்பட்டது. துணை மேயர் ராஜப்பா,கமிஷனர் ரவிச்சந்திரன்,பொறியாளர் சுப்பிரமணியன்,மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்துக்கழகம், திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் சசிகுமார் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். போக்குவரத்து பணியாளர்களின் குழந்தைகளில் 10-ம், 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசுகள் ,தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக 41 குழந்தைகளுக்கு ரூ. 48,500 வழங்கப்பட்டது. காந்திஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் ரவிசங்கர், ஜெயராஜ், ராமசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலைவர் புவனேஸ்வரி கொடியேற்றினார். செயலர் முத்துக்குமார் நன்றி கூறினார். திண்டுக்கல் ராம் நகர் குடியிருப்பு நலச்சங்க சார்பாக, நடந்த சுதந்திர தின விழாவில் நலச்சங்க தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். ஜி.டி.என்., கல்லுாரி தலைவர் ரெத்தினம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முகமது சித்திக் பேசினார். செயலர் ஷேக் முஜிபுர் ரகுமான் வரவேற்றார். சந்திரசேகர் நன்றி கூறினார். திண்டுக்கல் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். அமைப்புச் செயலர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணியன், முரளி பங்கேற்றனர். திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் சார்பாக கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சங்கத் தலைவர் சைலேந்திரராய் தேசியக் கொடி ஏற்றினார். மாவட்டத் தலைவர் ஏ.எஸ்.ஏ.சாமி, செயலாளர் கஷ்மீர் அருண், பொருளாளர் மணிப்பாண்டி பங்கேற்றனர். பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு, பரிசுகள் வழங்கப்பட்டது. வடமதுரை கொம்பேறிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை தேசிய பசுமை படை இணைந்து சுதந்திர தின விழா முன்னிட்டு 400 மரக்கன்றுகள் வழங்கும் ,நடும் விழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வயநமசி தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனர் மருதை கலாம் முன்னிலை வைத்தார். ஆசிரியர் ஜோன் மெர்லின் வரவேற்றார். வடமதுரை மாவட்ட கவுன்சிலர் தண்டாயுதம்,அறக்கட்டளை பேராசிரியர் முருகானந்தம், ஒருங்கிணைப்பாளர் முத்து கார்த்தி, திவாகர் பங்கேற்றனர். நாகவேல் நன்றி கூறினார். திண்டுக்கல் ஜி.டி. என் சட்டக் கல்லுாரியில் நடந்த விழாவில் கல்வி குழுமங்களின் தாளாளர் ரத்தினம், இயக்குனர் துரை கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன், துணை முதல்வர் சுடலைமுத்து பங்கேற்றனர். புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஆரோக்கியதாஸ் தேசியக் கொடி ஏற்றினார். திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத் தலைவர் புருஷோத்தமன், அரசன் சண்முகம் பேசினர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. திண்டுக்கல் ஓம் சாந்தி சி.பி.எஸ்.இ., அக் ஷசயா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் இ.என். பழனிசாமி கொடியேற்றினார். வாழைக்காய்பட்டி கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் சலீமா பேகம் தேசிய கொடியேற்றினார். நிர்வாக அதிகாரி முகமது ரபீக், முதல்வர் முத்துச்சாமி, துணை முதல்வர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சகாயமேரி தலையைில் விழா நடந்தது. திண்டுக்கல் வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளியில் தாளாளர் தாமேதரன் தலைமையில் விழா நடந்தது. செயலர் நளினி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் ஜே.கே., ஸ்ரீசங்கரா பப்ளிக் பள்ளியில் முதல்வர் சரவணக்குமார் தலைமை வகித்தார். செயலர் தர்ஷினி பிரியா, ஒருங்கிணைப்பாளர் ஜெயசுதா முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்கம் சார்பில், ராமசாமிபுரம் காந்திஜி நினைவு நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்வில் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தாளாளர் பத்மநாபன், மதர் தெரசா மண்டல தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் காமராஜ், பொருளாளர் அருணாச்சலம் பங்கேற்றனர். கல்லாத்துப்பட்டி கருணை இல்லத்திற்கு சங்கம் சார்பில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஸ்ரீகாமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் விமலா இயக்குநர்கள் நரசிங்கசக்தி, சித்ரா, அமுதா, ஜோதிலட்சுமி பங்கேற்றனர். நி.பஞ்சம்பட்டியில் நடந்த விழாவில் ஊராட்சி தலைவர் தேசிய கொடியை ஏற்றினார். தலைமையாரியர் பிரியர் பீட்டர் தலைமை வகித்தார். வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். திண்டுக்கல் அக்சுதா பப்ளிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலர்கள் மங்களராம், காயத்ரி மங்கள்ராம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவிகள் பாலஹரிணி,நேத்ரா வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக காந்திகிராம பல்கலை., பேராசிரியர் சண்முகவடிவு பங்கேற்று கொடிறே்றினார். முதன்மை முதல்வர் சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசுலோக்சனா, பத்மநாபன், ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, பிரபா, மணிமேகலை, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மேலாளர் பிரபாகரன் பங்கேற்றனர். திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் ரேவதி கொடியேற்றினார். திண்டுக்கல்லில் டாக்டர்.ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் அரசுநிதிபெறும் மேல்நிலைப்பள்ளி,தொடக்கப்பள்ளிகளில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. பிள்ளையார் நத்த மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் செல்வராணி தலைமை வகித்தார். தாளளர் அப்துல் முத்தலிப் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அரபி ஆசிரியர் முகமது அமீர் பங்கேற்றார். ஆசிரியை கவிதா வரவேற்றார். தலைமையாரியை வர்ஷினி பங்கேற்றனர். பேகம்சாஹிபா நகர தொடக்கப்பள்ளியில் பள்ளப்பட்டி ஊராட்சி தலைவர் பரமன் தலைமை வகித்தார். தலைமையாசிரியை பாத்திமாமேரி வரவேற்றார். முன்னாள் வார்டு உறுப்பினர் பாண்டி முன்னிலை வகித்தார். அசனாத்புர தொடக்கப்பள்ளியில் 45 வது வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சின்னதம்பி தலைமை வகித்தார். பொறுப்பு தலைமை ஆசிரியை அம்பிகாதேவி முன்னிலை வகித்தார். வ.உ.சிதம்பரம்பிள்ளளை சிலை அமைப்பு,பராமரிப்பு டிரஸ்டின் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலர் தனபாலன் வரவேற்றார். மேற்கு வட்டாட்சியர் வில்சன் ,வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் மேயர் மருதராஜ்,முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார் பங்கேற்றனர். டிரஸ்டின் உறுப்பினர் மாரிமுத்து இனிப்புகள் வழங்க பொருளாளர் பெருமாள்சாமி நன்றி கூறினார். தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் நாகராசன் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலர் சுப்பிரமணியம் கொடியேற்றினார். சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ராமலிங்கம், உயிர் வன அறக்கட்டளை கவியோவிய தமிழன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பொருளாளர் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் சார்பில் நடந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். துணை செயலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் தண்டபாணி கொடியேற்றினார். கவுரவ ஆலோசகர் டால்டன், நிர்வாகி நடராஜன், ரோதிராமலிங்கம், சந்திரன், தேவராஜ், மோதிலால், தவசிநாகராஜன், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் வெங்கிடு,முத்துக்குமார் ஏற்பாடுகளை செய்தனர். சீலப்பாடி நகர கூட்டுறவு சங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாப்பட்டது. செயலர் நாராயணசாமி கொடியேற்றினார். ஸ்ரீ சாவித்திரி வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்வில் அரிமா சங்க உறுப்பினர் சவுந்திராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி செயலர் பஞ்சகண்ணம் வரவேற்றார். தலைமையாசிரியர் கோமதி,தொடக்பகப்ளி தலைமையாசிரியர் செல்வராணி பங்கேற்றனர். கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் நடந்த நிகழ்வில் வள்ளலாளர் சன்மார்க்க சமூக சேவகர் அருணகிரி கொடியேற்றினார். மான்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். பொருளாளர் ஜெயந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் நவரத்தினம், கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமகாலிங்கம், காளிதாஸ், திருமுருகன், பத்மநாபன் பங்கேற்றனர். வடமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதுப்பட்டியில் தலைமையாசிரியர் சித்ரா கொடியேற்றனார். திண்டுக்கல் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் நந்தினி, ஆசிரியர் ஜெயெஹலன் பங்கேற்றனர். ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் மிட்டவுன் சார்பில் நடந்த விழாவில் ரோட்டரி சங்க தலைவர் நாகராஜன் கொடியேற்றினார். ஜெயசீலன், ஆண்டிச்சாமி, முரளிதரன், செல்வராஜ், ராஜன் ஆகியோர் வாழ்த்தினர். உஸ்மான், ஆனந்தன், பாலாஜி, நடராஜன், சிவ சிதம்பரம், அபிராமி கண்ணன், ஜெயசீலன், அப்துல்லா, சங்கரநாராயணன் பங்கேற்றனர். ரவிசங்கர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us