/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கள்ளச்சாராய விவகாரத்தில் வாய்திறக்காத இண்டியா கூட்டணி: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் குற்றச்சாட்டு
/
கள்ளச்சாராய விவகாரத்தில் வாய்திறக்காத இண்டியா கூட்டணி: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் குற்றச்சாட்டு
கள்ளச்சாராய விவகாரத்தில் வாய்திறக்காத இண்டியா கூட்டணி: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் குற்றச்சாட்டு
கள்ளச்சாராய விவகாரத்தில் வாய்திறக்காத இண்டியா கூட்டணி: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 25, 2024 06:26 AM

திண்டுக்கல் : ''கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க., இடம் பெற்றுள்ள இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் வாய் திறக்கவில்லை ''என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 57க்கு மேற்பட்டடோர் இறந்த சம்பவத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற தவறிய முதல்வர் ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அ.தி.மு.க., மேற்கு ,கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
தற்போது வரை 64 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 86 நபருக்கு உயிர் ஊசல் ஆடிக் கொண்டு இருக்கிறது.
இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். கள்ளச்சாராயத்தால் ஓராண்டிற்கு முன்பு 23 பேர்,தற்போது 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
சட்டசபையில் கள்ளச்சாராயம் குறித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறும் போது விதிமுறைப்படி சட்டசபை நடைபெற வேண்டும். கேள்வி நேரம் முடிந்த பின்பே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார்.
இதனை எதிர்த்து கேட்டபோது எங்களை குண்டுகட்டாக வெளியேற்றுகிறார்கள். 40க்கு 40 வெற்றி பெற்றதாக தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
அ.தி.மு.க., தோல்வியடைந்தாலும் ஒரு சதவீதம் ஓட்டு அதிகமாக பெற்றுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என கேள்வி எழுப்புகின்றனர். இடைத்தேர்தலில் ஒரு ஓட்டிற்கு ரூ.20,000 வரை கொடுத்து வருகின்றனர்.
வனத்துறை அமைச்சராக இருக்கும் போது கல்வராயன் மலை சென்றேன். அங்கு எங்கு பார்த்தாலும் அடுப்பு எரிகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சி வருகின்றனர். அவர்களிடம் உங்களது எம்.எல்.ஏ., உதயசூரியன் இருக்கிறாரே அவர் இதை பற்றி கேட்க மாட்டாரா என கேட்டபோது, அவர் தயவில் தான் நடத்துகிறோம். அவர்தான் எங்களின் கடவுள் என தெரிவித்தனர்.
தற்போது கல்வராயன் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட 17,000 லிட்டர் கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழிக்கின்றனர்.40க்கு 40 இடத்தை தி.மு.க., பெற்றது போல் அதே பாணியில் 2026 ல் அ.தி.மு.க., ஆட்சியைப் பிடிக்கும். கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு தேவையான மருந்துகள் மருத்துவமனையில் இல்லை.
மருந்து இருந்திருந்தால் 5 பேர் இறந்தபோதே இதனை தடுத்து இருக்கலாம். கள்ளச்சாராயம் குறித்து தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்., கம்யூ., வி.சி.க., ம.தி.மு.க., போன்ற கூட்டணி கட்சிகள் வாயை திறக்கவில்லை.
நடிகர் கமல்ஹாசன் குடிக்க கூடாது என யாரும் சொல்லவில்லை கொஞ்சமாக குடிங்கள் என்பது அவரின் அறிவுரையாக உள்ளது என்றார்.
திராவிட மாடல் அல்ல சாராய மாடல்
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருகிறது.போதைப் பொருளின் சந்தையாக தமிழகம் அமைந்துவிட்டது.
மக்களை போதைப் பொருளுக்கு அடிமையாக தி.மு.க., மாற்றிக் கொண்டு இருக்கிறது.இதற்கு முன்பு கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டபோது இனி தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது.
அவ்வாறு நடந்தால் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை அதற்குள் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 57 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தி.மு.க., அரசு வருமுன் காப்போம் என்பதையும் செய்யவில்லை. வந்தபின் காப்போம் என்பதையும் செய்யவில்லை.
போலீஸ் உளவுத்துறை, தமிழகத்தில் எங்கு எல்லாம் கள்ளச்சாராயம் உள்ளது என்ற அறிக்கையை முதல்வரிடம் கொடுத்திருப்பார்கள். அதன் பின்பு நடவடிக்கை எடுக்கவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது 3 மாதத்திற்கு ஒரு முறை கள்ளச்சாராயம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும் .அப்போது ஆளுங்கட்சியை சேர்ந்தவருக்கு தொடர்பு இருக்கிறது என்று தெரிந்தவுடன் கட்சியை விட்டு உடனடியாக நீக்கப்பட்டார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருக்காது.
உளவுத்துறை மூலம் கண்டிப்பாக தெரிந்திருக்கும். தமிழகத்தில் கையாளாகாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார்.
தி.மு.க., ஆட்சியில் போலீசார் சுதந்திரமாக செயல்பட விடவில்லை. தி.மு.க., நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் போலீஸ் இயங்குகிறது.
தி.மு.க., எம்.எல்.ஏ., முதல் அடிப்படை உறுப்பினர்கள் வரை கள்ளக்குறிச்சியில் மாமுல் பெற்றுள்ளனர். தி.மு.க ., ஆட்சி தொடர்ந்தால் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும்.
இது திராவிட மாடல் அரசு அல்ல சாராய மாடல் அரசு.ஸ்டாலின் பகிரங்கமாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கள்ளச்சாராயம் மரணம் குறித்து பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தோற்றுள்ளது என்றார்.
எம்.எல்.ஏ., தேன்மொழி, அமைப்புச் செயலாளர் மருதராஜ்,மாநில அம்மா பேரவை இணை செயலாளர் கண்ணன், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், பகுதி செயலாளர்கள்மோகன், சேது சுப்பிரமணி, முரளி ஒன்றிய செயலாளர்கள்ராஜசேகரன் ,முருகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், முன்னாள் மாநில பொது குழு உறுப்பினர் நெப்போலியன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, நடராஜன் ,பிரேம்குமார், தங்கத்துரை ,மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் ரவி மனோகரன்,மாவட்ட நிர்வாகிகள் ஜெயபாலன், ஜெயராமன், திவான், பாட்சா அன்வர்தீன்,பழனிச்சாமி கலந்து கொண்டனர்.