ADDED : ஜூலை 21, 2026 10:22 PM
அ நிறம் | அளவு
ஆயக்குடி, ஜூலை 22-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு எல் -நினோ காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி பழநி ஆயக்குடியில் நடந்தது.
கோவை ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட முதன்மை உழவியல் விஞ்ஞானி சண்முகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியன், மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய பேராசிரியர், தலைவர் ரமேஷ், ஒருங்கிணைந்த பண்ணை திட்ட அலுவலர் சதீஷ்குமார், இளநிலை வேளாண்மை அலுவலர் பாடலீஸ்வரன், முதல் உதவி வேளாண்மை அலுவலர் பாண்டியராஜன் பங்கேற்று விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
விவசாயிகளுக்கு பேட்டரி கைத்தளிப்பான், மண்வெட்டி, மக்காச்சோள களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, இடுபொருட்கள் ஆகியன வழங்கப்பட்டன.
